கொடைக்கானலில் அவகோடா விற்பனை மந்தம்: விவசாயிகள் கவலை
கொடைக்கானலில் அவகோடா எனப்படும் பட்டர் ப்ரூட் ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர் ..முக்கிய விவசாய பயிர்களான உருளை கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டை கோஸ், அவரை, வெள்ளை பூண்டு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர் .
தொடர்ந்து இவற்றின் ஊடு பயிராகவும் மற்றும் தனியாகவும் அவகோடா எனப்படும் பட்டர் ப்ரூட் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வகை பழங்கள் செண்பகனூர், சீனிவாசபுரம், கார்மேல்புரம், பள்ளங்கி, வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்துள்ளனர் . மருத்துவ குணம் கொண்ட இந்த பழங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் .
தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்றுமதி குறைந்து, விலையும் குறைந்துள்ளதாகவும் இதனால் இதை நம்பி இருந்த விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கினறனர். குறைந்த பட்சமாக 80 ரூபாய் மட்டுமே போவதாகவும் கூறுகின்றனர்.எ னவே ஏற்றுமதிக்கான வசதிகளை நேரடியாக அரசே மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.