கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுவாசக்கோளாறு: கிராம மக்கள் புகார்

நுரையீரல் சுவாசக் கோளாறு, தலைவலி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.;

Update: 2021-08-18 09:49 GMT

பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் கோரிக்கடவில் கிராம மக்கள் 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோரிக்கடவில் கரும்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கரும்பு கையால் சுவாசக்கோளாறு ஏற்படுவதால், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் .

பழனியை அடுத்த கோரிக்கடவு கிராமத்தில் 2000-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோரிக்கடவு கிராமத்தில் கணேசன் என்பவர் கரும்பு ஆலை வைத்து நடத்தி வருகிறார். கரும்பு ஆலையில்  பழைய டயர்கள் ,குப்பை கழிவுகளை தீயிட்டு எரிப்பதால், ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறி, கிராமம் முழுவதும் சூழ்ந்துள்ளது.



இதன் காரணமாக, கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுதுடன், நுரையீரல் பிரச்னைகள், சுவாசக் கோளாறு, தலைவலி உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும்  அவல நிலை தொடர்கிறது.

கிராம மக்களுக்கு இடையூறு செய்து வரும் ,தனியார் கரும்பு ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து கரும்பு ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News