கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ப்ரூனஸ் மலர்கள்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது.;

Update: 2021-08-26 11:21 GMT

கொடைக்கானலில் முழுவதும் பூத்து குலுங்கும் இளம்சிவப்பு ப்ரூனஸ் மலர்கள்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே, ஜூன் மாதம் நிறைவடையும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா தாெற்று பாதிப்பின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சுற்றுலாப்பயணிகள் வரத்துவங்கியுள்ளனர்.

செப்டம்பர், அக்டோபர் மாதம் பூக்க துவங்கும் இந்த ப்ரூனஸ் மலர்கள் டிசம்பர் வரை நீடிக்கும். தற்பொழுது கொடைக்கானல் மலை முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது. இந்த இளம் சிவப்பு ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Tags:    

Similar News