ஐவர்மலைக்காேயிலில் மாட்டு வண்டிகளை அடித்து நொறுக்கிய போலீஸ்; மக்கள் கொதிப்பு

பழனி அருகே மாட்டு வண்டியை உடைத்த காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-04 13:55 GMT

பழனி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாெதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி செய்தி 04.08.2021

பழனி அருகே மாட்டு வண்டியை உடைத்த காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியருகே உள்ள நெய்க்காரபட்டி பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகளில் நேற்று காலை ஐவர்மலை கோவிலுக்கு சென்றனர். மாட்டு வண்டிகளை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு கோவிலில் தரிசனம் செய்யச் சென்றனர்.

அப்போது, பழனி தாலுகா காவல் நிலையத்தை சேர்ந்த சுந்தரம் உள்ளிட்ட சில காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மாட்டுவண்டிகளுக்கு காவலுக்கு இருந்த சிலர் தடுத்தும் கேட்காமல் சேதப்படுத்தி விட்டு சென்றனர்.

சாமி தரிசனம் முடிந்து அடிவாரத்திற்கு வந்து பார்த்த பொதுமக்கள் மாட்டு வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்த  மக்கள் இன்று நெய்க்காரபட்டியில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் மாட்டுவண்டிகளை சேதப்படுத்திய காவலர் சுந்தரம் உள்ளிட்ட சில காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில் காவத்துறை சார்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டது.

இதனையடுத்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சங்கிலி மற்றும் வண்டிகளின் இருக்கைகள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனி தாலுகா காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News