பழனி அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல்: போலீசார் விசாரணை.

பழனி அரசு மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட சந்தன மரம் வெட்டிக்கடத்தப்பட்டதது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது;

Update: 2022-01-25 01:15 GMT

பழனி அரசு மருத்துவமனையில் வெட்டி எடுக்கப்பட்ட சந்தன மரம் 

பழனி அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு அருகில் சந்தனமரம் கடந்த இருபது ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்றுள்ளனர்.

சித்தா மருத்துவப் பிரிவு பின்புறம் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது மரம் வெட்டப்பட்டுள்ளதை பார்த்து தலைமை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து பழனி நகர காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இரு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள பழனி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News