பெட்ரோல் லிட்டர் ரூ.100ஐ தாண்டியது : பழனியில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-06-24 09:18 GMT

பழனியில் உள்ள பெட்ரோல் பங்கில் லிட்டருக்கு ரூ.100 என்றதால் பெட்ரோல் போட வந்தவர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.



ரூ


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்கலாம் என்றால் பொதுப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த சிரமம் ஏற்படும் என்று பழனி பொதுமக்கள், சிறு வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொழில் மற்றும் வருமானமின்றி தவிக்கும் இந்நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனையாவதால் சிறுதொழில்புரிவோர் வருமானத்தில் பாதியை பெட்ரோல், டீஸலுக்கு செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த  வேதனை அளிக்கிறது என்கின்றனர்.

எனவே, பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் அல்லது ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் பெட்ரோல் டீசலையும் கொண்டுவரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் நிதிநிலை சரியானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News