பழனி முருகன் கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணன் கொரோனாவால் உயிரிழப்பு..!
பழனி முருகன் கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணன் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழப்பு;
பழனி முருகன் கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணன் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழப்பு.
பழனி முருகன் கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பணன். கருப்பணன் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கருப்பனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். பழனி திருக்கோயில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கோயில் ஊழியர்களை சோகமடையச் செய்துள்ளது.