பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இரண்டு கோடியே 38 லட்சம்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக இரண்டு கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 ரூபாய் கிடைத்துள்ளது.

Update: 2021-08-24 09:24 GMT

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரொக்கமாக 2 கோடியே 38லட்சத்து 86ஆயிரத்து 50ரூபாயும், தங்கம் 1373கிராம், வெள்ளி 15319கிராம், வெளிநாட்டு கரன்சி 91நோட்டுக்களும் கிடைத்துள்ளது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் மதுரை மண்டல உதவி ஆணையர் விஜயன், பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News