பழனி கோவில் சார்பில் ரூ.2 கோடி மதிப்பிலான புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் - அமைச்சர் சக்கரபாணி

பழனி கோவில் சார்பில் 2 கோடிரூபாய் மதிப்பிலான ஆகிசிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம், மக்களின் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-01 00:46 GMT

பழனி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். 

பழனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற வணிகர் சங்கத்தின் சார்பில், 33லட்சம் ரூபாய் மதிப்பில், பழனி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் மையத்தை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்துவைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

கொரோனா காலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதை போக்கும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்துத்தந்த சாம்பார் ஆஃப் காமர்ஸ் வணிகர் சங்கத்திற்கு பாராட்டுகள். இந்த உற்பத்தி மையம் மூலம் ஒருமணி நேரத்திற்கு 100லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். நாள் ஒன்றுக்கு 20நோயாளிகள் வரை பயனடைவர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்புபூஞ்சை நோயால்‌ 3பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சை மருந்து சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு  கொண்டு வரப்படும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் 2கோடிரூபாய் மதிப்பில் விரைவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் திண்டுக்கல் மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்வதோடு‌ மட்டுமின்றி, பிற மாவட்ட மக்களின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்யும் என்றார். 

இதை தொடர்ந்து, பழனி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமையவுள்ள தற்காலிகமாக கொரோனா சிறப்பு சிகிச்சை மைய பணிகளை , அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், கோட்டாட்சியர் ஆனந்தி மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News