3 நாட்களுக்கு பிறகு திறப்பு: பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அலைமோதல்
பழனியில் மூன்று நாட்களுக்கு பிறகு, கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பழனியில் மூன்று நாட்களுக்கு பிறகு, கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகம் முழுவதும் கோரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதன்படி தமிழக கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பழனி கோவிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்றுவரை மூன்று நாட்களுக்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பழனிக்கு பாதயாத்திரையாக வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் கிரிவலம் சுற்றி வந்து அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கடந்த மூன்று நாட்களாக சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லாததாலும், பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழனியிலேயே தங்கி சாமி தரிசனம் செய்ததாலும் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் பழனியில் அலைமோதுகிறது.
எனவே வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு செல்லல் அனுமதி இல்லாததால் மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே தைப்பூசம் முடியும் வரையிலாவது பழனி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.