பழனி முருகன் கோவில் திறப்பு - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம்
ஊரடங்கு தளர்வு காரணமாக, பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் இன்று திறக்கப்பட்டது. முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.;
தண்டபாணி சுவாமி குடிகொண்டுள்ள புகழ்பெற்ற பழநி மலை
பழநி முருகன் கோவிலில், முகக்கவசம் அணிந்தல் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கொரானா காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில், இன்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன், படிவழிப்பாதையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அவ்வகையில், காலை 6மணிமுதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அன்னதானம், ரோப்கார் ஆகிய சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மின்இழுவை ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்களும் வழங்காமல் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைனில் பதிவுசெய்து வரும் பக்தரகளை, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப் படுகின்றனர். நீண்ட நாட்களுக்கு சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்குடன், முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.