கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து

பெரியகுளம் செல்லும் சாலையில் அடுக்கம் கிராமத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த மண் சரிவு ஏற்பட்டது

Update: 2021-10-26 08:16 GMT

கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. மேலடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி கொடைக்கானல் பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக மிக கனமழை பெய்து வந்தது.

இதனை தொடர்ந்து,  பெரியகுளம் செல்லும் சாலையில் அடுக்கம் கிராமத்தில் திடீரென 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் சாலையை கடந்து வர முடியாத சூழ்நிலை நிலவியதுட‌ன் போக்குவ‌ர‌த்து முட‌ங்கிய‌து. இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவு ஏற்பட்ட சாலையில் உருண்டு கிடந்த பாறைகள், மரம் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி மணல் மூடைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

Similar News