பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: குற்ற சம்பவங்களை கண்காணிக்க உயர் கோபுரம்
முதற்கட்டமாக பாதவிநாயகர் கோயில், சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் நிலையில் சமூக விரோதிகளின் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதன் எதிரொலியாக திருட்டு போன்ற குற்றசம்பவங்களை தடுக்க பழனி அடிவாரத்தில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பாதவிநாயகர் கோயில், சுற்றுலா பஸ்நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.