முழுஊரடங்கு: பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

முழுஊரடங்கை முன்னிட்டு, பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-05-10 15:38 GMT

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், பழனி சார் ஆட்சியர் ஆனந்தி ஆய்வு செய்தார்.

அப்போது, அனுமதிக்கப்படாத கடைகளை அடைக்கும்படி, அவர்கள் அறிவுறுத்தினர். அத்துடன், சாலையோர ம் செயல்பட்டு வந்த பழக்கடைகளையும், அவர்கள் அகற்றினர். இதுமட்டுமின்றி, தேவையில்லாமல் வாகனங்களில் சென்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்த ஆய்வின்போது பழனி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, வட்டாட்டசியர் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

Tags:    

Similar News