பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் சாமி தரிசனம்

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-12-11 04:42 GMT

பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்த நத்தம் விஸ்வநாதன்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் கழக அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர்  நத்தம் இரா. விசுவநாதன் தனது 73 வது  பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று  சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக வர்த்தக அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு புண்ணியம் டிரஸ்டில் காலை உணவு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.என்.வேணுகோபால்,  மாவட்ட மீனவர் அணி செயலாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் காலை உணவு வழங்கினர்.

நகர கழக பொருளாளர் அப்துல் காதர், 22 வது வட்ட பிரதிநிதி நாகராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் அபுதாகிர், 22 வது வட்ட பிரதிநிதி தாமோதரன், 22வது வார்டு அம்மா பேரவை கணேசன், பிரதிநிதி பட்டு செல்வம், மாணிக்கம், ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News