கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட வனத்துறை தீவிரம்
கொடைக்கானல் பள்ளத்துக்கால்வாய் நடுப்பட்டி பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டும்பணி நாளை தொடக்கம்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொடைக்கானல் அருகே பள்ளத்துக்கால்வாய், நடுப்பட்டி பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டும் பணிகள் நாளை முதல் துவக்கம் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.இதன் அடிப்படையில் கொடைக்கானல் பள்ளத்துக்கால்வாய் அருகே நடுப்பட்டி பகுதியில் வசிக்கும் கிராமமக்களிடம், நாளை மற்றும் நாளை மறுநாளும் பள்ளத்துக்கால்வாய் பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை காப்பு காடுகளுக்குள் விரட்டும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் .மேலும் விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.