பழனி மலைக்கோயிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-21 08:51 GMT

பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீவிபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யவேண்டிய முறைகள் குறித்து செய்முறை விளக்கம்‌ அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது, விபத்து பகுதிகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் ஆண்டவராஜ், தீயணைப்பு வீரர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News