கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-08-03 12:38 GMT

கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.மலைப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன் சீசன் துவங்கியது. ஊரடங்கால் இவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நீடித்தது. நாட்டு பேரிக்காய், சர்க்கரை, வால் பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய் ரகங்கள் உள்ளன. பறிக்கப்படும் பேரிக்காய்கள் கேரளா, கொடைரோடு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. துவக்கத்தில் கிலோ ரூ.15 க்கு விற்றது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் வரத்து குறைந்தும் விலை உயர்வின்றி கிலோ ரூ. 12 க்கு விற்கிறது. நடப்பாண்டில் விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.இது குறித்து சௌந்தரபாண்டியன் கூறுகையில்,'' நடப்பாண்டில் தொடர் மழை, சில வாரங்களாக சூறைக்காற்றால் மகசூல் பாதித்தது. கடந்த ஆண்டு கிலோ ரூ.30 க்கு விற்றது. இந்தாண்டு விலை வீழ்ச்சியால் காய்களை பறிக்காமல் விடப்பட்டுள்ளது'', என்றார்.

Tags:    

Similar News