பழனியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
பழனியில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான பல்வேறு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிக்கு சைரன் வைத்த வாகனத்தில் ஒரு டிப்டாப் ஆசாமி வந்து இறங்கினார். அவர் தன்னை குமார் என்றும், நாகப்பட்டினத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் தனக்கு நல்ல அறை ஒதுக்கி தருமாறு கேட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் போலி ஆசாமி எனத் தெரிய வந்தது. மேலும் அவர் வந்த சைரன் வைத்த வாகனமும் போலியாக தயார்படுத்தி வந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அந்த காரையும், அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் இதே போல் வேறு யாரிடமாவது அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.