கொடைக்கானலில் விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தலா? வனத்துறையினர் ஆய்வு

பேத்துப்பாறையில் தனியார் தோட்டங்களில் விலையுயர்ந்த மரங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி வனத்துறையினர் ஆய்வு.

Update: 2021-11-30 13:37 GMT

கொடைக்கானல் பேத்துப்பாறையில் தனியார் தோட்டங்களில் விலையுயர்ந்த மரங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கொடைக்கானலில் விலையுயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தலா? வனத்துறையினர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறையில் தனியார் தோட்டங்களில் விலையுயர்ந்த மரங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுவீடு தனியார் தோட்டங்களில் தோதகத்தி, குமிழ், வேங்கை போன்ற பாதுகாப்பு பட்டியலில் உள்ள மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மூலம் பிளாட் அமைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலங்கள் பராமரிப்பின்றி உள்ளதை பயன்படுத்தி குமிழ், வேங்கை மரங்களை சிலர் வெட்டிக் கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து புகார் எழுந்ததால் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது தெரிந்தது. புறம்போக்கு நிலங்களிலும் கைவரிசை காட்டினரா என வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். வனத்துறையினர் கூறியதாவது: சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர், நிர்வாகிகளிடம் விசாரணை நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தனர். பேத்துப்பாறையில் பட்டியலின மரங்கள் ஏராளமாக உள்ளன.

இந்நிலையில் மர்ம நபர்கள் மினி வேன்களில் பழநி மற்றும் காட்ரோடு வனத்துறை சோதனை சாவடி வழியாக கடத்தியுள்ளதாக தெரிகிறது. வனத்துறையினரும் உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளதால் உயரதிகாரிகள் அதிகாரிகள் விசாரிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Tags:    

Similar News