கொடைக்கானல் மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மேல்மலைக்கிராமங்களில் கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என தகவல் .;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மருத்துவமுகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் சிலப்பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்து எழுந்த புகாரை அடுத்து கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார் ..தொடர்ந்து முகாம்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.குறிப்பாக மேல்மலை கிராமங்களில் கூடுதலாக மருத்துவமுகாம்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் .