பழனி கோயிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது

பழனிக்கோயில் உண்டியல்கள் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் 17 நாட்களில் நிரம்பியதால் இன்று எண்ணப்பட்டது;

Update: 2022-01-11 07:00 GMT

பழனி கோயிலில் எண்ணப்பட்ட பக்தர்களின் உண்டியல் காணிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலுக்கு  வந்த பக்தர்களின் உண்டியல் காணிக்கை  இரண்டு கோடியை தாண்டியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்,  பழனிக்கோயில் உண்டியல்கள் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் 17 நாட்களில் நிறைந்ததை தொடர்ந்து இன்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 652 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 202 கிராமும் கிடைத்தது. பல்வேறு நாட்டு கரன்சிகள் 72 ம் கிடைத்தன. நாளையும் (செவ்வாய்க்கிழமை) உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.

Tags:    

Similar News