இன்றும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் போலீஸார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை மலை க்கு அனுப்பி வருகின்றனர்

Update: 2022-01-13 11:30 GMT

நாளை வெள்ளிக்கிழமை பக்தர்களின் தரிசனத்துக்குத்தடை என்பதால் இன்று பழனியில் திரண்ட பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம் , பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்- இன்றும், மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் கூட்டம் அலைமோதுவதால்  விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இரண்டாவது நாளாக நடைபெற்றுவருகிறது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.நாளை முதல் 18 ஆம் தேதி வரையில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்றும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பக்தர்கள் காவடி சுமந்து ஆடிபாடி சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.

பக்தர்கள் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் போலீஸார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை மலைமீது செல்ல அனுப்பி வருகின்றனர்.பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலிஸாரும், கோவில் நிர்வாகமும் தொடர்ந்த பக்தர்களை அறிவுறுத்தி வருகிறது.மேலும் பக்தர்கள் வரும் பாதையில் இடையூறு ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பழனி நகருக்குள் வராமல் மாற்றுப்பாதையில் அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News