கொரோனா நிவாரணநிதி: 75 வயது மூதாட்டி வழங்கிய 51ஆயிரம்
பழனியில் 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா நிவாரண நிதியாக 51ஆயிரம் ரூபாய் வழங்கினார்.;
பழனியில் 75வயது மூதாட்டி ஒருவர் கொரோனா நிவாரண நிதியாக 51ஆயிரம் ரூபாய் வழங்கினார். பழனி பகுதியில் தொடர்ந்து கொரோனா நிதி அளிக்கும் மூதாட்டிகளின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மற்ற தேவைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து பழனி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 75வயது மூதாட்டி ராமசீதா என்பவர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 51ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரது வீட்டிற்கே சென்ற பழனி வட்டாட்சியர் வடிவேல் முருகன் மூதாட்டியிடம் காசோலையை பெற்றுக்கொண்டார். முன்னால் பள்ளி தலைமை ஆசிரியையான மூதாட்டி ராமசீதாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதேபோல் கடந்த வாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுந்தரி என்பவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 20ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். தொடர்ச்சியாக பழனி பகுதியில் நிவாரன நிதி வழங்க மூதாட்டிகள் முன்வருவது வரவேற்பை பெற்றுள்ளது.