கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்

பழனியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

Update: 2021-05-15 08:21 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதல் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி பழனியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணநிதி வழங்கும் திட்டத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

தட்டான்குளம் ரேசன் கடையில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கியபோது அப்பகுதியை சேர்ந்த சிவமணி பாரதி என்கிற 13வயது சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த 15ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். நிவாரணநிதியை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சிறுவனை பாராட்டினார்.

Tags:    

Similar News