பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
பழனியில் கோட்டாட்சியர் ஆனந்தி தலைமையில்...
பழனியில் கோட்டாட்சியர் ஆனந்தி தலைமையில் சுகாதார துறையினர், கொரோனோ பாதுகாப்பு உடை அணிந்து பொதுமக்களுக்கு கொரோணா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பழனியில் சமீபகாலமாக கொரோணா தொற்று மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கோட்டாட்சியர் ஆனந்தி தலைமையில் பழனி உழவர் சந்தையில் கூட்டமாக மாஸ்க் அணியமல் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி ஊழியர்கள் கொரோனோ பாதுகாப்பு உடை அணிந்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கடைக்காரருக்கு பொருள்கள் வாங்க வருபவர்களை மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டது. வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..