பழனி முருகன் கோயிலில் முதலுதவி மருத்துவ மையம்: முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு உதவும் முதலுதவி மருத்துவ மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்;

Update: 2021-12-31 13:15 GMT
பழனி முருகன் கோயிலில்  முதலுதவி மருத்துவ மையம்: முதலமைச்சர் ஸ்டாலின்  திறப்பு

 பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு உதவும் வகையில் முதலுதவி மருத்துவ மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

  • whatsapp icon

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு உதவும் வகையில் முதலுதவி மருத்துவ மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் முதலுதவி மருத்துவ மையத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலமாக பழனி மலைக்கோயிலில் முதலுதவி மருத்துவ மையத்தை துவக்கி வைத்தார்.

தற்போது துவங்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தின் மூலமாக பக்தர்களின் ஆன்மீக பயணம் மேலும் பாதுகாப்பானதாக அமையவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கோயில் ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News