பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார்
பழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார்.;
பழனி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ ஆக நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை படிப்பு முடித்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பழனி முருகன் கோயிலில் மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து தனது குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு பிறந்த மகன் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு கொடுத்து அபிஷேக பொருட்களை அளித்தனர்