அரசு பஸ்சில் பயணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம்: அதிகாரி அதிரடி உத்தரவு

கொடைக்கானலில், உள்ளூர்வாசிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது, ஆதார் அட்டையை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று, போக்குவரத்து கழக மேலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-28 12:05 GMT

கொடைக்கானலில், அரசு பேருந்தில் உள்ளூர்வாசிகள் பயணம் செய்வதற்கு ஆதார் அட்டை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளை பரிசோதிக்கும் அதிகாரிகள்.

தமிழகத்தில், கொரோனா ஊரடங்கில் இன்று முதல், புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன. அதே நேரம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலம் என்பதால், அங்கு சுற்றுலாப்பயணி வருகைக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளியூர் நபர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில், கொடைக்கானல் மக்கள் பயணம் மேற்கொள்ளும் போது, கட்டாயம் ஆதார் அட்டை காண்பித்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று, கொடைக்கானல் போக்குவரத்து கழக மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News