பழனி: ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதி

பழனி கோவிலுக்கு ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது‌.

Update: 2021-07-03 13:56 GMT

பழனி கோவிலுக்கு ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது‌.

கொரோனா பரவல் காரணமாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கடந்த 2மாத காலமாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு அனுமதிக்கப் படவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தபடி குடமுழுக்கு நினைவிருக்கும் வழியாக மேலே சென்று, படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையில் ஒரு வழிப் பாதையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6மணிமுதல் இரவு 8மணிவரை ஒருமணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். அபிஷேகம் மற்றும் அர்ச்சனை பொருட்கள் எதுவும் பக்தர்கள் கொண்டவர்கள் கூடாது என்றும், ரோப்கார் செயல்படாது என்றும், மின்இழுவை ரயில் இயக்கப்படும் என்றும், 10வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், 60வயதிற்கு மேற்பட்டவர்களும், காய்ச்சல் சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள்‌ கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பழனி கோவிலுக்கு வரும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News