திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப் பிரியர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் மதுப் பிரியர்கள் குவிந்தனர்.

Update: 2021-06-15 10:21 GMT

சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பிடித்து அமர்ந்து இருக்கும் மது பிரியர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப் பிரியர்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்  மதுக்கடையில் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் குடையுடன் மதுபாட்டில்களை வாங்க காத்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு மதுப் பிரியர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அவர்களை  கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது மதுகடையில் மதுபாட்டில்கள் இருப்பு இல்லாத நிலையில் மதுப்பிரியர்களை வரிசையில் காத்திருந்தனர். குடையுடன்  வந்த நபர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்களை மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News