போலீஸாரை உற்சாகப்படுத்திய காவல்துறை கண்காணிப்பாளர்
பழனியில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் போலீஸாரை உற்சாகப்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளர் ரௌவளிபிரியா முககவசம், கிருமிநாசினி வழங்கினார்.;
பழனியில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் போலீஸாரை உற்சாகப்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளர் ரௌவளிபிரியா முககவசம், கிருமிநாசினி வழங்கினார்.
பழனியில் ஊரடங்கு காலத்தில் போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் தொடர்ந்து பொது மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழனியில் பணியாற்றும் காவல்துறையினரை உற்சாகப்படுத்தி பாராட்டும் வகையில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரௌவளிபிரியா நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருக்கு முக கவசம், கிருமிநாசினி வழங்கினார். மேலும் போலீசாரை உற்சாகப்படுத்தும் வகையில் இனிப்பு கார வகைகள் வழங்கி சுழற்சி முறையில் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
அதேபோல கொரோனா தொற்றில் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாகவும், காவல் நிலையத்திற்கு வந்த உடனும் கால்நிலையத்தில் உள்ள ஆவி பிடிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டாயம் ஆவி பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது எனவும் அறிவுரைகளை வழங்கினார். அப்போது இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சிவன் என்பரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ரௌவளி பிரியா கேக் கொண்டு வந்து காவலர் சிவன் பிறந்தநாளை அனைத்து போலீஸாருடனும் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார்.