350 ஆண்டு பழமையான தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு கூட்டு திருப்பலி

மேட்டுப்பட்டி, வெள்ளோடு, பஞ்சம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காோர் பங்கேற்று புதிய ஆண்டை வரவேற்றனர்

Update: 2022-01-01 12:52 GMT

 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு நேர சிறப்பு கூட்டு திருப்பலியானது அருள் தந்தை செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல்  மாவட்டம் மேட்டுப்பட்டியிலுள்ள 350 ஆண்டு பழமை வாய்ந்ததேவாலயத்தில் 2022 புத்தாண்டு  பிறப்பையொட்டி  நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலியில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு நேர சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. 96 பட்டிகிராமங்களுக்கு தாய் கிராமமாக விளங்கக் கூடிய திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 2021ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் திருப்பலி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு நேர சிறப்பு கூட்டு திருப்பலியானது அருள் தந்தை செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 2021 மறைந்து 2022 வானத்திலிருந்து இறங்கியதை போன்ற காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது.

இதில், மேட்டுப்பட்டி, வெள்ளோடு, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்று புதிய ஆண்டை வரவேற்றனர்.இதனை தொடர்ந்து ஆலயத்தில்  வாணவேடிக்கைகளுடன் பட்டாசு வெடித்து  புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி, பொதுமக்களுக்கு கேக்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து பொது மக்களுடன் புத்தாண்டை கொண்டாடினர்.

Tags:    

Similar News