கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா

உலக பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2021-02-17 05:07 GMT



ஆண்டுதோறும் மாசிமாதம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கொடியேற்று விழா நடைபெற்றது. அரசு நெறி முறைப்படி கொடிமர வளாகத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சாம்பன் குலம் சார்பில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பாலகொம்பு கொடிமரத்துக்கு முன்பாக ஊன்றப்பட்டது. பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த கொடி எடுத்து வரப்பட்டது. கோயில் தலைமை பூசாரியால்,சிம்ம வாகனத்தில் அம்மன் அமர்ந்த நிலையில் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கொடிமரத்திற்கு முன்பு ஊன்றப்பட்ட பால கொம்புவில் பெண்கள், மஞ்சள் கலந்த நீரை ஊற்றினார்கள். கொடியேற்ற நிகழ்வில் பொதுமக்கள், கொடிக்கம்பம் வளாகத்திற்கு அனுமதிக்காததால் பூட்டப்பட்ட வாசல்களில், கொடிமரம் மற்றும் சாமி தரிசனம் பெற நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Tags:    

Similar News