சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன பேரணி
32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் மகிழுந்து வாகன பேரணி நடைபெற்றது.;
இந்தியா முழுவதும் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடந்த ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மாத விழாவின் இருபத்தி ஐந்தாவது நாளான இன்று திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக மகிழுந்து பேரணி நடைபெற்றது.
இப்பேரணி ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலிலிருந்து தொடங்கி தாடிக்கொம்பு ரோடு, ஆர்.எம் காலனி, காட்டாஸ்பத்திரி வழியாக அரசு பொது மருத்துவமனை வரை சென்று மீண்டும் அது வழியாகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நிறைவடைந்தது.
பேரணியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியகுமார், மோகனப்பிரியா, செல்வம், ஈஸ்வரன், வருவாய் அலுவலர் கோவிந்தராசு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட மகிழ்வுந்து வாகனங்களில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து காலங்களில் 108 அவசர ஊர்தி வருவதற்கு முன், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காக்க வேண்டும் என மருத்துவ செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.