திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு
மதுரை, திருச்சி,திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 603 காளைகளும் 400 மாடு பிடி விரர்கள் கலந்து கொண்டனர்.;
திண்டுக்கல் அடுத்த உள்ள நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் தேவாலயம் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 12.2.21 இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு பேட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி,திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 603 காளைகளும் 400 மாடு பிடி விரர்கள் கலந்து கொண்டனர். இதில் 5 பிரிவுகளாக பிரித்து மாடுபிடிவீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்தனர். முன்னதாக வீரர்கள் உறுமொழி ஏற்றினார். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் முறையாக காளைகளுக்கும் பரிசோதனை செய்த பிறகு வாடி வாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டானர். ஒவ்வொரு குழுவுக்கும் 1 மணி நேரம் அனுமதித்தனர். வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாடுகளை பிடித்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெள்ளிக்காசு, சைக்கிள், சில்வர் அண்டா, ஆடு, கிடா ஆடு, உள்ளிட்ட பரிசுகள் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.