திண்டுக்கல்லில் அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அரசு மதுபான கடை அருகே அமமுக பிரமுகர் கலையரசன் வெட்டிக்கொலை. தாலுகா போலீசார் விசாரணை.;

Update: 2021-01-31 03:14 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அடுத்து கொல்லம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும் ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று இரவு பாலகிருஷ்ணாபுரம் அருகே உத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு மது அருந்த தனது சொந்த ஆட்டோவிலேயே வந்துள்ளார். மது அருந்தி கொண்டிருக்கும்பொழுது மர்ம நபர்கள் கலையரசனிடம் தகராறு செய்து தலை மார்பு வயிறு ஆகிய பகுதிகளில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கம் உயிரை கெடுக்கும் என்ற வாசகத்திற்கு ஏற்றார்போல் நடைபெற்ற இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News