பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் பணி நியமன முறைகேடு: சிபிஐ கட்சி தர்ணா

பூண்டி புஷ்பம் கல்லூரியின் வரலாற்றுப் பெருமைகளை சீர்குலைக்கின்ற வகையில் பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளது

Update: 2023-06-20 07:00 GMT

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்றது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டம் 

பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் வராததால் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்றது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பூண்டியில் இயங்கி வரும் பூண்டி புஷ்பம் கல்லூரியின் வரலாற்றுப் பெருமைகளை சீர்குலைக்கின்ற வகையில் பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்து நடைபெற்ற வரும் வழக்ககை விரைவு படுத்த வேண்டும்.

இன சுழற்சி முறையை மாற்றி அமைத்து, பேராசிரியர் பணியிடங்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் விதிமுறைகளை பின்பற்றி, இட ஒதுக்கீட்டை முறையோடு, வெளிப்படையான நேர்மையான பணி நியமனம் செய்திட ஏதுவாக , மறுபடியும் நேர்காணல் நடத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை 20.6.2023 செவ்வாய்க்கிழமை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூர் வட்டாட்சியர் இரண்டு தரப்பின ரையும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப் பதாகவும், போராட்டத்தை ஒத்திவைத்து பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று 19.6.23 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சு வார்த்தைக்கு வராதாதால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு மண்டல கல்லூரி இணை இயக்குனரின் பிரதிநிதியாக உதவி இயக்குனர் க.கெளடல்யன் வந்ததும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மண்டல கல்வி இணை இயக்குனர் தொடர்புடைய ஆவணங்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டால் மட்டுமே சமூக தீர்வு காண இயலும் என தெரிவிக்கப்பட்டது.

மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நிலையில் எதிர்வரும் 30.06.2023 அன்று தொடர்புடைய ஆவணங்களுடன் கலந்து கொள்வதாக உறுதி அளித்த அடிப்படையில் பேச்சுவார்த்தை 30 .6. 2023 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வட்டாட்சியர் வி.எஸ்.சக்திவேல், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, சரக வருவாய் ஆய்வாளர் எஸ்.ஆர். வினோத், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், தெற்கு மாவட்ட துணை செயலாளர் கோ. சக்திவேல், மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன்.

தஞ்சை மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர்,வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கடேசன், ஆர்.எஸ். பாலு, சாமு.தர்மராஜ், பி.தாமரைச்செல்வி, தங்க.சக்கரவர்த்தி, நாராயணன், சுந்தர்ராஜ், சேகர் மற்றும் ஏஐடியுசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், நிர்வாகிகள் வெ.சேவையா,. துரை.மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமரன், கேராஜாராம், எஸ்.தாமரைச்செல்வன் உள்ளிட்டார் பங்கேற்றனர்

Tags:    

Similar News