இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

அரசு அறிவித்தபடி இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

Update: 2021-04-20 04:03 GMT

லாக்டவுன் மாதிரி படம் 

தமிழகத்தில் இன்று முதல்  இரவு 10மணி முதல்  அதிகாலை  காலை 4மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல்  அதிகரித்து வருவதை தடுக்க இம்மாதம்  30ம் தேதி நள்ளிரவு வரை,  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து  தொற்று  அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும்  இன்று இரவு 10மணி முதல் அதிகாலை காலை 4மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இரவு நேர ஊரடங்கின் போது  தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள்  அனுமதிக்கப்படமாட்டாது. 

அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படஉள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. இந்த தடை  அனைத்து நாட்களுக்கும் பொருந்தும். அனைத்து கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு  தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News