தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வக்கீல் கோர்ட் புறக்கணிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர், நாமக்கல் வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் குடும்பநல கோர்ட் நீதிபதியை மாற்ற வேண்டும். கீழமை கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கோர்ட்டில் பணிபுரியும் வக்கீல்களுக்கு, நீதிபதிகள் உரிய மரியாதை வழங்க, ஐகோர்ட்டு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வக்கீல்களுக்கு ஆதரவாகவும், இன்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை, நாளை 20ம் தேதி சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.