கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Update: 2022-04-25 09:34 GMT
கொரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
  • whatsapp icon

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (25.4.2022) தலைமைச் செயலகத்தில், கொரோனா கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் மு.அ.சித்திக், நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்/ சிறப்புப் பணி அலுவலர் முனைவர் ப.செந்தில்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News