பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முதல்வரின் காணொளி கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் கேட்டறிந்தார்.

Update: 2021-11-06 14:45 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற முதல்வரின் காணொளி கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்,

அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகனுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர். திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மற்றும் அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News