ஆதிதிராவிடர் , பழங்குடியின மக்களுக்கு இலவச பட்டா: முதலமைச்சர் வழங்கினார்

Update: 2022-04-05 02:26 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நேற்று இணையவழி பட்டாக்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மரு. டி.ஜி. வினய், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News