உதயநிதி பிறந்த நாள்:உதவிகள் வழங்கி மழை நீர் அகற்றும் பணிகள பார்வையிட்ட எம்எல்ஏ
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் மார்க்கெட் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி, சேமியா, எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளையும், மதிய உணவும் வழங்கினார்.மேலும் எண்ணூர் பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். ராட்சஷ இயந்திரம் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியை பார்வையிட்ட அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.