மாநகராட்சி தேர்தல் - திருவொற்றியூரில் விருப்பமனு தாக்கல் செய்த திமுகவினர்

சென்னை பெருமாநகராட்சி தேர்தலுக்காக, , திருவொற்றியூர் பகுதி திமுகவினர், ஆர்வமுடன் விருப்பமனு தாக்கல் செய்தனர்.;

Update: 2021-11-24 13:00 GMT

விருப்ப மனு அளித்த திமுகவினர். 

தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள்,  விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக தலைமை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பல பகுதிகளில், திமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி மன்ற தேர்தலில் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 10 ஆவது வார்டில் போட்டியிட, திமுக கிழக்கு பகுதி இலக்கிய அணி செயலாளர் நித்யதாசன் மற்றும் 10 வது திமுக வட்ட செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர், மாதவரத்தில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதியில் உள்ள 8 வார்டுகளில் 6 வார்டுகள் பெண்கள் வார்டாகவும், 2 வார்டுகள் மட்டுமே பொது வார்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 7 மற்றும் 10 ஆகிய 2 வார்டுகள் பொது வார்டாக உள்ளன. பொது வார்டாக இந்த 2 வார்டுகள் இருப்பதால் திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுகவினர் பலர், இந்த வார்டுகளில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இந்த 2 வார்டுகளில் போட்டியிட யாருக்கு திமுகவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் திமுகவினரிடையே பெரும் போட்டியும், பரபரப்பும் நிலவி வருகிறது.

Tags:    

Similar News