தலைவர் நியமனத்தால் பலகைதொட்டி குப்பத்தில் சர்ச்சை: மீண்டும் மோதல்

பலகை தொட்டி குப்பத்தில் தலைவர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் மீண்டும் மோதல் உண்டானது.

Update: 2021-07-03 09:11 GMT

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் மீனவர் கிராமத்தில் தலைவரை மாற்றுவது குறித்து கடந்த மாதம் சர்ச்சை எழுந்த நிலையில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள திருவொற்றியூர் குப்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இதுகுறித்து காவல் துறைஅதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுரைப்படி இருதரப்புக்கும் சமாதானம் செய்து மீண்டும் ஊருக்குள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது பெண்களில் ஒரு பிரிவினர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் உள்ள பூந்தொட்டிகளையும் கண்காணிப்பு கேமராவையும் அடித்து உடைத்தனர். இதனால் ராஜேந்திரன் உட்பட நான்கு குடும்பத்தினர் மீண்டும் பலகை தொட்டி குப்பத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மீனவர் தலைவர்கள் இருதரப்புக்கும் சமாதானப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் 5 பெண்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News