சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை தொடரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழையால் பல பகுதிகளும் வெள்ளக்காடாக உள்ளன. இந்த சூழலில், நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.