செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்-6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் இடங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அக் 6ம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். அதன்படி ஆக்டோபர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தலும், அக்டோபர் 9ம் தேதி 2 கட்ட தேர்தலும் நடக்க உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு வாக்கு சீட்டுகளில் வாக்குகளை பதிவிட வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இலந்தூர், புனிததோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளவர்கள் முதல் கட்ட தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செயய வேண்டும். இந்த முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம் 15ம் தேதியும், வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதியும், 23ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும் நடக்கிறது. 25ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளகும்,அக்டோபர் 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.