வேடந்தாங்கல் ஊராட்சி தலைவர் தேர்தலில் வேதாசலம் வெற்றி
வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வேதாசலம் வெற்றிப் பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சி தலைவர் பதவிக்கு வேதாசலம், சரண்யா, அரசு, ஷர்மிளா லோகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் வேதாசலம் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 16ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.