தாமஸ் மலை ஒன்றியம் 7 வது வார்டில் 7 முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7முனைப் போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-02 15:45 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கல்பனா.

செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அமுதா, திமுக சார்பில் கல்பனா, தேமுதிக சார்பில் விஜயபாரதி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புனிதவள்ளி, நாம் தமிழர் கட்சி சார்பில் லோகேஸ்வரி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கவிதா, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அஸ்வினிஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தாமஸ் மலை 7 வது வார்டில், திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags:    

Similar News